வைரலாகும் குக் வித் கோமாளி பிரபலங்களின் ரொமான்டிக் நடனம் !
By Aravind Selvam | Galatta | June 27, 2021 17:22 PM IST

தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய் டிவி.ரசிகர்களின் ரசனை அறிந்து பல புதுமையான நிகழ்ச்சிகளை விஜய் டிவி ஒளிபரப்புவார்கள்.பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட் அடித்து விடும்.அப்படி விஜய் டிவியின் புதிய முயற்சியாக ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.பலர் இந்த நிகழ்ச்சி தங்களுக்கு செம என்டேர்டைன்மென்டை தருவதாகவும் ரசிகர்கள் பலர் மீம்ஸ்,வீடியோக்கள் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்த தொடரின் மூலம் பல காமெடியன்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலன்களாக மாறியுள்ளனர்.
இரண்டாவது சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை ரித்திகா, பாலாவுடன் ஜோடி சேர்ந்து செம ரகளைகளை இவர் செய்துள்ளார்.விஜய் டிவியில் இன்று காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற புதிய நிகழ்ச்சி தொடங்குகிறது இதில் பாலா,ரித்திகா,புகழ் என்று பல குக் வித் கோமாளி நட்சத்திரங்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ரித்திகா மற்றும் பாலா இணைந்து மின்சார கனவு படத்தின் சூப்பர்ஹிட் பாடலான வெண்ணிலவே பாடலுக்கு நடனமாடியுள்ளனர்,இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.ஏற்கனவே இருவரும் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஈஸ்வரன் படத்தின் மாங்கல்யம் பாடலுக்கு நடனமாடினர்,இந்த வீடியோவும் செம ட்ரெண்ட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
Pppaaaah... பின்றியே டா பாலா! 🔥 #ComedyRajaKalakkalRani - இன்று மதியம் 1.30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #CRKR pic.twitter.com/xT6EmSiukR
— Vijay Television (@vijaytelevision) June 27, 2021