சிம்பு பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி பிரபலங்கள் !
By Aravind Selvam | Galatta | May 09, 2021 12:31 PM IST
தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய் டிவி.ரசிகர்களின் ரசனை அறிந்து பல புதுமையான நிகழ்ச்சிகளை விஜய் டிவி ஒளிபரப்புவார்கள்.பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட் அடித்து விடும்.அப்படி விஜய் டிவியின் புதிய முயற்சியாக ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.பலர் இந்த நிகழ்ச்சி தங்களுக்கு செம என்டேர்டைன்மென்டை தருவதாகவும் ரசிகர்கள் பலர் மீம்ஸ்,வீடியோக்கள் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்த தொடரின் மூலம் பல காமெடியன்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலன்களாக மாறியுள்ளனர்.
புகழ்,பாலா,ஷிவாங்கி உள்ளிட்டோர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு நட்சத்திர அந்தஸ்தை எட்டி விட்டனர்.முதல் சீசனின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை விஜய் டிவி தொடங்கினர்.முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை விட இந்த சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது.
குக் வித் கோமாளி தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது.கனி இந்த சீசனின் வெற்றியாளராக வந்தார்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் பெரிய வெற்றியை தொடர்ந்து தற்போது செம பிஸியாக இருக்கின்றனர்.இந்த சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரித்திகா,
இவர் இந்த நிகழ்ச்சியில் பாலாவுடன் ஜோடி சேர்ந்து செம ரகலைகளை செய்துள்ளார்.தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக குக் வித் கோமாளி குழுவினர் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் ஈஸ்வரன் படத்தின் ஹிட் பாடலான மாங்கல்யம் பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளனர் பாலா மற்றும் ரித்திகா.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.
Vera level.. vera level! 🔥
சூப்பர் சிங்கர் - இன்று மற்றும் நாளை இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #SuperSinger #VijayTelevision pic.twitter.com/NNyfy5DhI4— Vijay Television (@vijaytelevision) May 8, 2021