சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் மணிமேகலை.2010-ல் சன் மியூசிக் சேனலில் தனது பணியை தொடங்கினார் மணிமேகலை.தொடர்ந்து பல ஹிட் ஷோக்களை ஹோஸ்ட் செய்த மணிமேகலை சன் டிவி,சன் நியூஸ் உள்ளிட்ட சேனல்களிலும் பணியாற்றியுள்ளார்.சிறப்பு நிகழ்ச்சிகள் பலவற்றிற்கும் தொகுப்பாளினியாக இருந்துள்ளார் மணிமேகலை.

சில சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் ஆடியோ லாஞ்ச்களையும் மணிமேகலை தொகுத்து வழங்கியுள்ளார்.உதவி நடன இயக்குனராக இருந்த ஹுசைனை காதலித்து கடந்த 2017-ல் கரம் பிடித்தார் மணிமேகலை.திருமணத்தை தொடர்ந்து சன் டிவியில் இருந்து பிரேக் எடுத்த மணிமேகலை சிறிய இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியில் இணைந்தார்.

விஜய் டிவியின் பிரபல கேம் ஷோவான Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவர் ஹுசைன் உடன் கலந்துகொண்டார்.இந்த நிகழ்ச்சியில் 3ஆவது இடத்தை பிடித்து அசத்தினார் மணிமேகலை.இதனை தொடர்ந்து கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 2 தொடரை தொகுத்து வழங்கினார்.இதனை தொடர்ந்து விஜய் டிவியின் சமீபத்திய ஹிட் தொடரான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பல ரசிகர்களை பெற்றிருந்ததார்.

கொரோனா காரணமாக முதல் இரண்டு லாக்டவுன்களில் தங்கள் கிராமத்தில் மாட்டிக்கொண்ட மணிமேகலை தன்னுடைய கிராமத்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சில வீடியோக்களை வெளியிட்டார் மணிமேகலை,இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.இதனை தொடர்ந்து சென்னைக்கு திரும்பியபின் அந்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வந்தார் மணிமேகலை.

தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 வில் பங்கேற்று அசத்தி வருகிறார்.தற்போது இந்த தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மணிமேகலை,நடுவர் தாமுவுடன் இணைந்து இவர் நடனமாடும் இந்த வீடியோவில் புகழ் இடையில் வந்து அவர்களை டிஸ்டர்ப் செய்கிறார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

A post shared by Mani Megalai (@iammanimegalai)