தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் செந்தில்.பல படங்களில் தனது அப்பாவியான நடிப்பால் கவுண்டமணியுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவரது பல காமெடிகள் இன்றும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது.

Comedian Senthil Video Message on Twitter Entry

கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார்.கொரோனா காரணமாக பலரும் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.

Comedian Senthil Video Message on Twitter Entry

செந்தில் ட்விட்டரில் இணைத்துள்ளார் என்று ஒரு ட்விட்டர் பதிவு சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இது ஒரு போலி கணக்கு என்று செந்தில் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.தற்போது இது குறித்து செந்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் எந்த சமூகவலைத்தள பக்கத்திலும் தான் இல்லை என்று தெரிவித்துள்ளார்,தற்போதுள்ள கொரோனா காரணமாக அனைவரும் கவனமாக இருக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.