மார்டன் காஸ்ட்யூமில் இளைஞர்களுக்கு டஃப் தரும் நடிகர் செந்தில் !
By Sakthi Priyan | Galatta | October 20, 2020 17:46 PM IST

தமிழ் சினிமாவில் வடிவேலு, விவேக், சூரி, யோகி பாபு என்று எத்தனையோ காமெடியன்கள் வந்தாலும் காமெடி ஜாம்பவான்கள் என்றால் செந்தில் – கௌண்டமணி தான். இருவரையும் ஸ்க்ரீனில் ஒரு சேர பார்த்து விட்டால் சிரிப்பு தானாக வந்துவிடும். தற்போது வரை இவர்கள் காம்போவை மிஞ்ச யாரும் இல்லை. அப்படி ஒரு இணை இருவரும். கிட்டத்தட்ட 15 வருடங்கள் தனியாக தமிழ் சினிமாவின் காமெடி டிபார்ட்மென்ட்டை கவனித்துக் கொண்டனர். இவருடம் சேர்ந்து ராமராஜனின் கரகாட்டக்காரன் படத்தில் இவருடம் காமெடியை இன்று வரை ரசிக்கின்றனர் மக்கள்.
இதில் செந்தில் எப்படி சினிமாவிற்கு வந்தார் தெரியுமா? செந்தில் இராமனாதபுரம் மாவட்டம் சேர்ந்தவர். இவரது வீட்டில் அப்பா மளிகை கடை வைத்திருப்பவர். சிறு வயதில் நிறைய குறும்புகள் செய்வாராம் செந்தில். 13 வயது இருக்கும் போது ஏதோ குறும்பு செய்துவிட்டார் என செந்திலின் அப்பா திட்டியுள்ளார், இதனால் கோபித்துக்கொண்டு பஸ் ஏறி சென்னை வந்துவிட்டார் செந்தில். எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் பல கடைகளில் தினக் கூலிக்கு வேலை செய்துள்ளார் செந்தில். அதில் கிடைத்த சில நண்பர்களின் மூலம் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
நாடங்களில் கிடைத்த பல சினிமா பிரபலங்களை வைத்து சினிமாவிற்குள் நுழைந்துள்ளார் செந்தில். அதிலும் அவர் முதலில் நடித்தது ஒரு மலையாள படத்தில். பின்னர் தான் கவுண்டமனி – செந்தில் என்ற கமெடி கலாட்டா. இப்போதும் கவுண்டமனி அண்ணனுடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். அவர் எனக்கு எப்போதும் அண்ணன் என ஒரு பேட்டியில் நெகிழ்வுடன் கூறினார்.
இந்நிலையில் நடிகர் செந்திலை இதுவரை பலரும் கண்டிராத வித்தியாசமான மார்டன் காஸ்ட்யூமில் இளைஞர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஆளே டோட்டலாக மாறிப்போன புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கி இருக்கும் நடிகர் செந்தில் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் அதேசமயம் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட விளம்பரப் படம் ஒன்றிற்கு செம ஸ்டைலிஷாக மார்டன் உடையணிந்து கொண்டு இதுவரை யாரும் கண்டிராத வகையில் செம ஸ்டைலிஷாக இருக்கும் நடிகர் செந்திலின் இந்த அசர வைக்கும் புகைப்படங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராசாத்தி எனும் சீரியலில் நடித்தார் செந்தில். தற்போது ஆயிரம் ஜன்னல் வீடு என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.
This Tamil music composer onboard for Prabhas' next mega biggie | Massive Update
20/10/2020 05:21 PM
Prabhas' Radhe Shyam with Pooja Hegde to have no fights: Report
20/10/2020 04:24 PM
OFFICIAL: After Putham Pudhu Kaalai, it is a gangster film for Bobby Simha!
20/10/2020 04:18 PM