அடங்க மறு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் கோமாளி.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

Comali Movie Team Celebrates Kajal Jayanthi On Occasion of Kajal Aggarwal Birthday

Vels International Films இந்த படத்தை தயாரிக்கிறது.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.குறிப்பாக கடைசியாக வெளியான போஸ்டர் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.

Comali Movie Team Celebrates Kajal Jayanthi On Occasion of Kajal Aggarwal Birthday

தற்போது படத்தின் நாயகி காஜல் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஒரு புதிய போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.அம்மன் கெட்டப்பில் காஜல் அகர்வால் இருக்கும் இந்த போஸ்டரில் பைசா நோட் கோவிலின் கடவுள் காஜல் அகர்வாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளனர்.

Comali Movie Team Celebrates Kajal Jayanthi On Occasion of Kajal Aggarwal Birthday

மேலும் இந்த நாளுக்கு காஜல் ஜெயந்தி என்று பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் முதல் பாடலான பைசா நோட் பாடல் நாளை வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comali Movie Team Celebrates Kajal Jayanthi On Occasion of Kajal Aggarwal Birthday