நீச்சலுடையில் செம குத்தாட்டம் போட்ட கோமாளி பட நடிகை ! ட்ரெண்டிங் வீடியோ
By Aravind Selvam | Galatta | February 16, 2021 21:11 PM IST

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி கடந்த வருடத்தின் சூப்பர்ஹிட் வெற்றியடைந்த திரைப்படம் கோமாளி..அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.காஜல் அகர்வால் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.யோகி பாபு,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் 100 நாட்களை கடந்து பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் சம்யுக்தா ஹெக்டே.இந்த படத்தில் ஒரு ஹீரோயினாக நடித்த அவர் ரசிகர்களின் மனங்களை கொள்ளைகொண்டார்.இதனை தொடர்ந்து வருண் ஹீரோவாக நடித்த பப்பி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார்.
டான்சில் ஆர்வம் கொண்ட சம்யுக்தா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது டான்ஸ்,ஒர்க்கவுட் வீடியோக்களை பதிவிடுவார்.கொரோனா காரணமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க நிறைய ஒர்க்கவுட் மற்றும் டான்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார் சம்யுக்தா ஹெக்டே.இந்த லாக்டவுன் நேரத்தில் இவர் நிறைய ஹூப் எனப்படும் வளையத்தை வைத்து செய்யும் ஒர்க்கவுட்களை அதிகம் செய்து வந்தார்.
இடையில் சில சலசலப்புகளை தாண்டி வந்த சம்யுக்தா,அதனை தொடர்ந்து சில நடன வீடியோக்கள் மற்றும் ஒர்க்கவுட் வீடியோக்களையும் பகிர்ந்து வந்தார் சம்யுக்தா,இந்த வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது பிகினி உடையில் நடன வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் இந்த வீடியோ ரசிகர்கள் செம மத்தியில் வைரலாகி வருகிறது.