காபி வித் காதல் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் !
By Aravind Selvam | Galatta | October 07, 2022 18:37 PM IST
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான கமர்சியல் இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி.தனது ஜாலியான படங்கள் மூலம் பல ரசிகர்களை பெற்றுள்ளார் சுந்தர் சி.இவர் இயக்கிய அரண்மனை 3 திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களிடம நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து இவர் இயக்கும் படம் காபி வித் காதல்.ரொமான்டிக் காமெடி படமாக தயாராகி வரும் இந்த படத்தினை குஷ்பூவின் அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஜீவா,ஜெய்,ஸ்ரீகாந்த்,அம்ரிதா ஐயர்,மாளவிகா ஷர்மா,சம்யுக்தா ஷண்முகம்,ரைசா,ஐஸ்வர்யா தத்தா,தொகுப்பாளினி DD திவ்யதர்ஷினி,ரெடின் கிங்ஸ்லி என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருந்தது.பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் நவம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
The feel-good Family Entertainer from Sundar C, #CoffeeWithKadhal gears up for worldwide theatrical release on Nov 4😍#CoffeeWithKadhalFromNov4
— RIAZ K AHMED (@RIAZtheboss) October 7, 2022
A #SundarCEntertainer
A @thisisysr Musical#SundarC @khushsundar @Udhaystalin #AvniCinemax @RedGiantMovies_ #BenzzMedia @U1Records pic.twitter.com/QsAeG8BR0c
Sundar C's Coffee With Kadhal gets its new release date - big announcement made!
07/10/2022 08:20 PM