கடாரம் கொண்டான் படத்தின் ரிலீஸை தொடர்ந்து சீயான் விக்ரம் நடிக்கவிருக்கும் படம் விக்ரம் 58.டிமான்டி காலனி,இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Cobra Director Ajay Gnanamuthu Mother Visits Sets

Viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் Seven screen ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Cobra Director Ajay Gnanamuthu Mother Visits Sets

இந்த படத்திற்கு கோப்ரா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

Cobra Director Ajay Gnanamuthu Mother Visits Sets

இந்த படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்த இயக்குனர் அஜய் ஞானமுத்து.படத்தின் ஷூட்டிங் ஒழுங்காக நடக்கிறதா என்பதை பார்ப்பதாற்காக தனது அம்மா வந்திருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார்.இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

One of those days when ur mom comes to check if you’re working properly 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤣🤣 #Cobra #waitingtogetbacktowork

A post shared by Ajay Gnanamuthu (@aj_gnanamuthu) on