மாஸ்டர் திரைப்படத்தின் சென்சார் குறித்து கிளம்பிய வதந்தி ! முற்றுப்புள்ளி வைத்த படக்குழுவினர்
By Sakthi Priyan | Galatta | May 25, 2020 17:28 PM IST
XB பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பி வருகிறது.
கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. விரைவில் இந்நிலையை கடந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி, தளபதியை பெரிய திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் சென்சார் சர்டிஃபிக்கேட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதில் மாஸ்டர் படத்திற்கு U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், படத்தின் ரன்-டைம் 181 நிமிடங்கள் என்றும் இருந்தது. இதுகுறித்து மாஸ்டர் படக்குழுவுடன் விசாரித்த போது, அது முற்றிலும் பொய்யான செய்தி என்று தெளிவு செய்தனர். இதையடுத்து மாஸ்டர் படத்தின் சென்சார் குறித்து பரவி வந்த தவறான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
COVID-19: Economic impact on the youngsters of today!
25/05/2020 08:00 PM
Official clarification on Master censor certificate and runtime
25/05/2020 06:28 PM