தென்னிந்தியா திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் நடிகை அனுஷ்கா. ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் சைலன்ஸ் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அனுஷ்காவுடன் நடிகர் மாதவன் முக்கிய ரோலில் நடித்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ரெண்டு படத்திற்கு பிறகு இப்படத்தில் தான் அனுஷ்கா மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ளனர். 

Madhavan

இவர்களோடு அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பா ராஜு, மைக்கேல் மேட்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திகில் கலந்த கிரைம் த்ரில்லர் படமாக தயாராகி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது இப்படம். படத்தின் ட்ரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. 

Anushka

இந்நிலையில் இந்த படம் ஆன்லைனில் வெளியாகவுள்ளது என வதந்தி கிளம்பியது. இதற்கு சரியான முற்றுபுள்ளி வைத்தனர் படக்குழுவினர். படப்பிடிப்பு துவங்கிய முதல் நாளிலிருந்தே நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உதவிகரமாக உள்ளனர். குறிப்பாக நடிகை அனுஷ்காவும் எங்களை நன்கு புரிந்துள்ளார். இதுபோன்ற வீணற்ற வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்று படக்குழுவினர் கேட்டுக்கொண்டனர்.