இந்திய திரை உலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக தயாராகி வரும் செல்வன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களான சீயான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், கிஷோர், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் மிகவும் பிரபலமான பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி உருவாகும் இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த நிலையில் தற்போது இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ...
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ravi Varman (@r_varman_)