மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி நடித்த கைதி படத்தினை இயக்கினார்.

இந்த படமும் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றது.வளர்ந்து வரும் முன்னணி இளம் இயக்குனர்களில் ஒருவராக தவிர்க்க முடியாத ஒரு இடத்தினை பிடித்தார் லோகேஷ்.அடுத்ததாக தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தினை இயக்கினார்.இந்த படமும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தார் லோகேஷ்.

மாஸ்டர் படத்திற்கு அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தினை இயக்கவுள்ளார் லோகேஷ்.ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.ஃபஹத் பாசில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதை சமீபத்தில் உறுதிசெய்தார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அன்பறிவு இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றுவார்கள் என்ற அறிவிப்பை சமீபத்தில் லோகேஷ் தெரிவித்தார்,இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக அங்கமலே டைரிஸ்,ஜல்லிக்கட்டு உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான கிரிஷ் கங்காதரன் இணைந்துள்ளார் என்ற தகவலை லோகேஷ் பகிர்ந்துள்ளார்.தமிழில் சர்கார் படத்தை தொடர்ந்து இந்த படத்தில் கிரிஷ் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது