ஷூட்டிங் ஸ்பாட் முதல் பொது நிகழ்ச்சிகள் வரை நடிகர்களை பத்திரமாக அழைத்துச் செல்லும் அற்புத பணியை செய்பவர்கள் பாடிகாட்ஸ். அலை கடலென ரசிகர் கூட்டம் இருந்தாலும்,  நடிகர்களை பாதுகாப்பாக கவனித்து கொள்ளும் பாதுகாவலர்களில் ஒருவர் தாஸ். 

Cine Artistes Bodyguard Maranalloor Das Dies

கேரளாவை சேர்ந்த தாஸ் சேட்டன் முன்னணி நடிகர்களின் பாதுகாவலராக பணியாற்றி வந்துள்ளார். நடிகர்கள் விஜய், சூர்யா, பவன் கல்யாண், மோகன் லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் நம்பிக்கையான பாதுகாவலராக பணியாற்றியிருக்கிறார். மஞ்சள் காமாலை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தாஸ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Cine Artistes Bodyguard Maranalloor Das Dies

தாஸ் சேட்டனின் மரண செய்தியை அறிந்த பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல மலையாள நடிகரான பிரிதிவ்ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் அவரை பிரிந்து வாடும் குடும்பத்திற்கு இரங்கல் என வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.