விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி 2 வாரங்களை கடந்து பரபரப்பாக நகர்கிறது. முன்னதாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தைப் பெற்ற நமீதா மாரிமுத்து முதல் வாரத்திலேயே தவிர்க்கமுடியாத காரணங்களால் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் 17 போட்டியாளர்களுடன் 2-வது வாரத்தில் தொடக்கத்தில் நடந்த நாமினேஷன் ப்ராசஸ்-ல் 15 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு அதிலிருந்து நாடியா சாங் முதல் ஆளாக எலிமினேட் செய்யப்பட்டார். இதனையடுத்து நேற்று (அக்டோபர் 18)  3-வது வாரத்தின் தொடக்கத்தில் நடந்த கேப்டன் போட்டியில் சிபி இந்த வார கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று (அக்டோபர் 19)  நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகின. பிக் பாஸ் சீசன் 5 முதல் லக்சரி பட்ஜெட் டாஸ்க் அறிவிக்கப்பட்டது. இதில் வெற்றி பெறும் போட்டியாளர் இந்த வார எலிமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தால் அதிலிருந்து தன்னை காப்பாற்றி கொள்ள முடியும். அப்படி எலிமினேஷனுக்கு தேர்வாகாத போட்டியாளர் வெற்றி பெற்றால் அவரால் ஒருவரை காப்பாற்ற முடியும்.

எனவே மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற இந்த டாஸ்கின் இன்றைய  நாள் (அக்டோபர் 19) முடிவில் அபிஷேக் மற்றும் சிபி இருவருக்கும் இடையில் காரசாரமான விவாதம் எழுகிறது. அதில் அபிஷேக், “எனக்கு சரி தப்புன்னு எதுவுமே கிடையாது” என வாதிடும் ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.