வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து STR 45 படத்திலும் நடித்து வந்தார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.எஸ்.ஏ.சந்திரசேகர்,பாரதிராஜா,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.யுவன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிபோயுள்ளது.STR என்ன செய்தாலும் அவரை பற்றி என்ன செய்தி வந்தாலும் அது வைரலாகி விடும்.சமீபத்தில் இவரது சமையல்,ஜாகிங் வீடியோக்கள் வைரலாகி வந்தன.கெளதம் மேனன் இயக்கிய குறும்படத்திலும் வீட்டிலிருந்தே நடித்து கொடுத்திருந்தார்.

நடன இயக்குனர் சதிஷ் தற்போது இன்ஸ்டாகிராமில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் ஷூட்டிங் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பகிர்ந்துள்ளார்.தான் STR-க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் வீடீயோவை பகிர்ந்த சதிஷ் ,என்ன இருந்தாலும் STR கூட ஆடுறது ஒரு செம பீலிங்,நம்ம என்ன ஸ்டெப் போட்டாலும் அசால்ட்டா ஆடிருவாரு என்று கூறியுள்ளார்.இந்த வீடியோவில் STR ஆடி முடித்ததும் அவரை கட்டித்தழுவி முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார் சதிஷ்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சதிஷ் தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட இந்த வைரல் வீடீயோவை இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்