இந்திய திரையுலகின் பிரபலமான டான்ஸ் கோரியோகிராபராக திகழ்பவர் பிருந்தா மாஸ்டர். 90 காலகட்டத்தில் இருந்து தற்போது வரை பல முன்னணி நடிகர் நடிகைகளின் படங்களில் கோரியோகிராபராக பல புரிந்து இருக்கிறார். படங்களில் உதவி டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்து இருந்த இவருக்கு சுந்தர் சி-ன் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தான் டான்ஸ் மாஸ்டராக பணிபுரியும் வாய்ப்பு எட்டியது. 

அதற்கு பிறகு இவர் பல வெற்றி படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தார். இவர்களுடைய குடும்பமே நடனக் கலையில் கை தேர்ந்தவர்கள். 1995-ம் ஆண்டு உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான நம்மவர் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பிருந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், தளபதி விஜய்யுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி பதிவு செய்துள்ளார். 

உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றவர் தளபதி விஜய். சினிமா நட்சத்திரங்கள் கூட தளபதிக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். பொதுவாகவே தளபதி அதிகம் பேச மாட்டார் என்று தான் அவருடன் பணியாற்றியவர்கள் கூறுவார்கள். சர்க்கார் படத்தில் வரும் ஒரு விரல் புரட்சியே..பாடலை ஷூட் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ள அவர், விஜய் சாருடன் சர்க்கார் படத்தில் பணியாற்றிய புகைப்படங்கள். நான் அவருடன் மற்ற பல படங்களிலும் பணியாற்றி உள்ளேன். அவர் down to earth நபர். 

அவர் எப்போதும் மிகக் குறைவாகத் தான் பேசுவார் ஆனால் அவரது வேலை படங்கள் பேசும். அதிகம் திறமையான மற்றும் பணிவான ஒரு நபர் என தளபதி விஜய் பற்றி புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார் பிருந்தா. பிருந்தாவின் இந்த பதிவின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர் தளபதி ரசிகர்கள். 

நடன இயக்குனராக இருக்கும் பிருந்தா இயக்குனராக களமிறங்கவுள்ள திரைப்படம் ஹே சினாமிகா. துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். வானம் கொட்டட்டும் படத்தில் தனது ஒளிப்பதிவு மூலம் ஈர்த்த ப்ரீதா ஜெயராம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். பிருந்தா திரைப்பயணத்தில் இந்த ஹே சினாமிகா திரைப்படம் முக்கிய திருப்பமாக இருக்கும் என்று கூறலாம்.