தனது ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகரான சீயான் விக்ரம் நடிப்பில் இந்த ஆண்டில் வரிசையாக மூன்று திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றனர். அந்த வகையில் முதலாவதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் அவரது மகன் துரு விக்ரம் இணைந்து நடித்த மகான் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகி சூப்பர் ஹிட் ஆனது.

தொடர்ந்து இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பல வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கடைசியாக இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக வெளிவந்து பிரம்மாண்ட வெற்றி பெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார் சீயான் விக்ரம்.

இந்த வரிசையில் அடுத்ததாக முதல் முறை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார். கேஜிஎஃப் கதை களத்தை மையப்படுத்தி பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் தங்கலான திரைப்படத்தை 
தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா அவர்களின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன.

சீயான் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் தங்கலான் திரைப்படத்தில்  நடிக்கின்றனர்.  கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒகேனக்கலில் நடைபெற்று வரும் நிலையில், ஒகேனக்கலில் சீயான் விக்ரம் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் உட்பட குழுவினர் அன்றைய படப்பிடிப்பு பேக்கப் ஆனதும் தண்ணீரில் விளையாடிய வீடியோவை நடிகர் சீயான் விக்ரம் பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று ஒகேனக்கல் அருகில் தங்கலான் படப்பிடிப்பு கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது பேக்கப் என்று கேட்டதும் ஒரே குதி! தண்ணீரில் என் நண்பர்களை விடுவேனா என்ன? ஐயோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியில் தண்ணீரை விட்டு வர மறுத்தது தான் மிச்சம்" எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். வைரலாகும் வந்த வீடியோ இதோ…
 

chiyaan,chiyaan vikram,vikram,pa ranjith,gv prakash kumar,chiyaan 61,thangalaan,thangalaan movie,malavika mohanan,parvathi thiruvothu,hari,thangalaan teaser