தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த சிறந்த நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் சீயான் விக்ரம். முன்னதாக டிமான்டி காலனி & இமைக்கா நொடிகள் படங்களின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பல வித்தியாசமான கெட்டப்களில் சீயான் விக்ரம் நடித்துள்ள கோப்ரா  திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து இந்திய திரை உலகின் மிக பிரம்மாண்ட படைப்பாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ளார். இந்த ஆண்டு கோடை வெளியீடாக பொன்னியின் செல்வன் திரைக்கு வர உள்ளது.

அடுத்ததாக முதல் முறை தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பா.ரஞ்சித் உடன் சீயான் விக்ரம் புதிய படத்தில் இணைகிறார். இத்திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் மகான்.

நடிகர்கள் சீயான் விக்ரம்,துருவ்  விக்ரம், பாபி சிம்ஹா, வாணிபோஜன், சிம்ரன் மற்றும் தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்துள்ள மகான் படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள மகான் திரைபடம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மகான் படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் விதமாக ஒவ்வொரு கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளிவரவுள்ளன.  அந்த வகையில் மகான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் பாபி சிம்ஹாவின் சத்யவான் கதாபாத்திரத்தின் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டர் இதோ…