தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக தான் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு நடிப்பில் பல வெரைட்டிகள் கொடுக்கும் நடிகர் விக்ரம். முன்னதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விரைவில் வெளிவரவுள்ள கோப்ரா படத்தில் பல வித்தியாசமான கெட்டப்களில் மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதனையடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் வெளிவரும் மகான் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சீயான் விக்ரம். 

மகான் திரைப்படத்தில் முதல்முறையாக விக்ரம் உடன் அவரது மகன் துருவ் விக்ரம்  நடித்துள்ளார். மேலும் சிம்ரன், வாணி போஜன் & நடிகர்கள் பாபி சிம்ஹா, சனந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்ய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளியான மகான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் & வீடியோக்கள் மற்றும் முதல் பாடலான சூறையாட்டம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், சீயான் விக்ரமின் 31 ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக CHIYAANISM SINCE 1990 என மகான் படத்தில் சீயான் விக்ரமின் ஸ்டைலான புதிய புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளனர். ட்ரெண்டாகும் அந்த புகைப்படம் இதோ...