சீயான் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ள படம் மகான்.இந்த படம் கொரோனா சூழல் காரணமாக நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் பிப்ரவரி 10ஆம் வெளியாகியுள்ளது.கார்த்திக் சுப்பாராஜ் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.சிம்ரன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.பாபி சிம்ஹா,சனந்த்,முத்துக்குமார் என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

3 வருடங்கள் கழித்து விக்ரம் படம் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.பெரிய வெற்றி படமாக இந்த படம் அவதரித்துள்ளது.

இந்த படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதை ஒட்டி படக்குழுவினர் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்,மேக்கிங் வீடியோ,ஒரு வீடியோ பாடல் என பலவற்றை வெளியிட்டுள்ளனர்.படத்தில் நீக்கப்பட்ட வாணி போஜனின் காட்சிகளையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இவற்றை கீழே உள்ள லிங்கில் காணலாம்