தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சீயான் விக்ரம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொன்னின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதனையடுத்து முதல் முறையாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கவுள்ள  புதிய திரைப்படத்தில் விக்ரமஞ நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பல வித்தியாசமான கெட்டப்களில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசானது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனம் தயாரித்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற  மகான் திரைப்படத்தின் Deleted Scene-ஐ சீயான் விக்ரமின் பிறந்தநாளான இன்று ஏப்ரல் 17ஆம் தேதி மகான் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த Deleted Scene வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.