சீயான் விக்ரமின் ACTION PACKED துருவ நட்சத்திரம் பட சென்சார் ஓவர்... ரசிகர்களுக்கு காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு!

சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம் பட சென்சார் அறிக்கை வெளியீடு,chiyaan vikram in dhruva natchathiram movie censored with ua | Galatta

நீண்ட காலமாக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் சீயான் விக்ரமின் அதிரடி ஆக்சன் திரைப்படமான துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் சென்சார் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆகச்சிறந்த நடிகராக படத்திற்கு படம் வித்தியாசமான கதை களங்களையும் நல்ல கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் இதயங்களில் தனக்கான இடத்தை பிடித்திருக்கும் நடிகர் சீயான் விக்ரம் அடுத்தடுத்து சீயான் விக்ரம் நடிக்கும் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் முதல் முறையாக சீயான் விக்ரம் தங்கலான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நிறைவடைந்த தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக சீயான் விக்ரம் நடிப்பில் அடுத்து ரிலீசுக்கு தயாராகி இருக்கும் திரைப்படம் தான் துருவ நட்சத்திரம்.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் பக்கா ஸ்டைலான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் முதல் முறை சீயான் விக்ரம் நடித்த திரைப்படம் தான் துருவ நட்சத்திரம்.சீயான் விக்ரமுடன் இணைந்து ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடிக்க, இயக்குனர் பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி-DD , விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா, சதீஷ் கிருஷ்ணன், முன்னா சைமன், மாயா கிருஷ்ணன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஒன்றாக என்டர்டைன்மென்ட், கொண்டாடுவோம் என்டர்டைன்மென்ட் & எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் இடையே தடைபட்டு நின்றது. 

கடந்த ஆறு ஆண்டுகளில் வெவ்வேறு கட்டங்களாக பலமுறை படப்பிடிப்புகள் நடைபெற்று கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. ஆறு ஆண்டுகளாக இப்படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக விரைவில் துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸாக இருப்பதாகவும் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் அறிவித்திருந்தார். எனவே எப்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், தற்போது துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் சென்சார் நிறைவடைந்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மிரட்டலான ஆக்சன் படமாக வெளிவர இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு சென்சாரில் U/A சான்று வழங்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நாளை செப்டம்பர் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று காத்திருப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாய் அறிவித்துள்ளது. அனேகமாக துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது வடக்குழு வெளியிட்ட துருவ நட்சத்திரம் படத்தின் சென்சார் அறிக்கை இதோ… 
 

Get ready for the mission👊🏻#DhruvaNatchathiram is armed with a U/A certification and is all set to infiltrate social media with an announcement at 11 AM, Tomorrow⚡@chiyaan @menongautham @Jharrisjayaraj @oruoorileoru @manojdft @srkathiir @the_kochikaran @editoranthony pic.twitter.com/Cap87j6914

— OndragaEntertainment (@OndragaEnt) September 22, 2023