தமிழ் சினிமா ரசிகர்களை தனது நடிப்பால் கவர்ந்து இழுத்து முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் சீயான் விக்ரம்.இவர் நடித்துள்ள கோப்ரா,பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.இதனை அடுத்து இவர் நடிக்கும் சீயான் 61 பட பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

இதனை தவிர இவர் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் சில வருடங்களாக தள்ளிப்போனது.கெளதம் மேனன் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.ஐஸ்வர்யா ராஜேஷ்,ரித்து வர்மா,பார்த்திபன்,சிம்ரன்,திவ்யதர்ஷினி,ராதிகா உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Ondraga என்டேர்டைன்மெண்ட்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் சில ட்ரைலர்கள் மற்றும் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மற்றும் சில போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மீதம் உள்ளன.சில காரணங்களால் படத்தின் வேலைகள் கிடப்பில் போடப்பட்டன.

தற்போது கெளதம் மேனன் விக்ரமுடன் சில புகைப்படங்களை பகிர்ந்து துருவ நட்சத்திரம் படத்தின் வேலைகள் விரைவில் தொடங்கும் என நம்பிக்கை கொடுத்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் விரைவில் இந்த படத்தினை காணலாம் என்ற உற்சாகத்தில் உள்ளனர்.