இந்திய திரையுலகில் பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை வருத்திக்கொண்டு நடிப்பவர் சியான் விக்ரம். சியான் விக்ரமின் மகள் அக்ஷிதா கடந்த 2017 ஆம் ஆண்டு மனுரஞ்சித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பேரன் ஆவார். இந்த திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. விக்ரம் மகள் அக்ஷிதா விக்ரம் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அவருக்கு தற்போது அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாம். தாயும் சேயும் நலமாக இருப்பதாக செய்திகள் தெரியவந்தது. 

இதனால் நடிகர் விக்ரம் தாத்தா ஆகியுள்ளார். அவரின் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தாத்தாவான சியானுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்து வருகிறது. கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். 

ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். கொரோனா காரணமாக இந்த படத்தின் மீதியுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 

படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஏழு வித்தியாசமான தோற்றங்களில் சியான் விக்ரம் உள்ள போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச்செய்தது. முதல் பாடலான தும்பி துள்ளல் பாடல் வெளியாகி பிலே லிஸ்ட்டை ரூல் செய்து வருகிறது. இப்படம் நிச்சயம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று படக்குழுவினர் சமீபத்தில் நம்பிக்கை தெரிவித்தனர்.  

இந்த படத்தின் டப்பிங் வேலைகள் லாக்டவுனுக்கு பிறகு சமீபத்தில் துவங்கியது. ஷூட்டிங் முடிந்தவரையிலான காட்சிகளுக்கு டப்பிங் வேலைகளை முடித்து விட்டு அடுத்தகட்ட படப்பிடிப்பை படக்குழுவினர் தொடங்கவுள்ளனர். படத்தின் முக்கிய ரோலில் நடிக்கும் இர்ஃபான் பதானின் கேரக்டர் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அஸ்லான் இல்மாஸ் எனும் இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார்.