1999-ல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் சித்தி.கண்ணின் மணி என்ற டைட்டில் பாடலில் தொடங்கி 90'ஸின் மிகப்பெரிய ஹிட் தொடராக இந்த தொடர் இருந்தது.இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரிலும் ராதிகா ஹீரோயினாக நடித்து வந்தார்.சித்தி 2 தொடரின் ஒளிபரப்பு ஜனவரி 27ஆம் தேதி முதல் தொடங்கியது.கொரோனா காரணமாக இந்த தொடுரின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது,இதனை தொடர்ந்து இந்த தொடரில் நடித்து வந்த பொன்வண்ணன்,நிகிலா,ஷில்பா உள்ளிட்ட சில முக்கிய கேரக்டேர்கள் சில காரணங்களால் மாற்றப்பட்டனர்.

ப்ரீத்தி ஷர்மா,நந்தன் லோகநாதன்,மீரா கிருஷ்ணன்,மஹாலக்ஷ்மி இந்த தொடரின் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்து வருகின்றனர்.பொன்வண்ணன் கேரக்டரில் நிழல்கள் ரவி நடிக்கிறார்,நிகிலா ராவ் நடித்து  கதாபாத்திரத்தில் காயத்ரி யுவராஜ் நடிக்கிறார்,ஷில்பா நடித்து வந்த கதாபாத்திரத்தில் ஜெயலட்சுமி நடிக்கிறார்.

இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது.இந்த தொடரில் இருந்து சீரியல் நடிப்பில் இருந்தும் வெளியேறுவதாக ராதிகா கடந்த மாதம் திடிரென முடிவெடுத்தார்.ராதிகா இல்லாமல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.தொடரின் விறுவிறுப்பை கூட்ட ஹீரோவை இரட்டை வேடத்தில் அறிமுகப்படுத்தினார் சீரியல் குழு,தற்போது அதில் ஒரு கதாபாத்திரத்தை கதையில் இருந்து வெளியேறுவது போல காட்சி அமைத்துள்ளனர்.அந்த கதாபாத்திரம் மீண்டும் வருமா,இல்லை அவ்வளவு தானா என்று ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.