தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமான மெகா ஸ்டார் சிரஞ்சீவி, முன்னதாக  மோகன்லால் நடித்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான லூசிஃபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் காட்ஃபாதர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் முக்கியமான கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

அடுத்ததாக வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகும் போலா ஷங்கர் படத்தில் நடித்து வரும் சிரஞ்சீவி தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் பாபி இயக்கத்தில் #MEGA154 திரைப்படத்திலும், இளம் இயக்குனர் வெங்கி குடுமலா இயக்கும் #Chiru156 புதிய படத்திலும் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார். 

மேலும் புஷ்பா திரைப்படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் சிரஞ்சீவி நடிக்க உள்ளாதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி அவரது மகன் நடிகர் ராம்சரணுடன் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா திரைப்படம் வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. 

கோனிடெலா புரொடக்ஷன் கம்பெனி மற்றும் மேட்னி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள ஆச்சார்யா படத்தில் கதாநாயகிகளாக காஜல் அகர்வால் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்க, பவண், சோனு சூட், ஜிஷூ செங்குப்தா, சௌரவ் லோகேஷ், கிஷோர், தணிக்கெல்லா பரணி, சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஆச்சாரியா திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவில் மணிசர்மா இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஆச்சார்யா படத்தின் பலே பலே பஞ்சாப் பாடல் தற்போது வெளியானது. அசத்தலான அந்த பாடல் இதோ…