எண்ணற்ற தெலுங்கு சினிமா ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரட் ஹீரோவாகவும் இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் அடுத்ததாக புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து நடிகை ராதிகாவின் ராடான் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரபல இளம் தெலுங்கு இயக்குனர்களான பாபி மற்றும் வெங்கி குடுமலா ஆகியோரின் படங்களிலும் நடிக்கவுள்ள சிரஞ்சீவி முன்னதாக அஜித் குமாரின் வேதாளம் படத்தின் ரீமேக்காக நடித்துள்ள போலா ஷங்கர் திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த வரிசையில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள திரைப்படம் காட்ஃபாதர்.

மலையாளத்தில் மோகன்லால் நடித்து மெகா ஹிட்டான லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக கோனிடெல்லா புரோடக்சன் கம்பனி மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள சிரஞ்சீவியுடன் நயன்தாரா, சத்யதேவ் காஞ்சர்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள காட்ஃபாதர் திரைப்படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடித்துள்ளார்.

நீரவ்ஷா ஒளிப்பதிவில் காட்ஃபாதர் திரைப்படத்திற்கு S.தமன் இசையமைத்துள்ளார். வருகிற அக்டோபர் 5-ம் தேதி காட்ஃபாதர் திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் காட்ஃபாதர் திரைப்படத்திலின் அசத்தலான ட்ரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…