தமிழ் திரை உலகின் மிகவும் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சிம்புதேவன், இம்சை அரசன் 23-ம் புலிகேசி, அறை எண் 305-ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். கடைசியாக தளபதி விஜய் நடித்த புலி திரைப்படத்தை இயக்கிய சிம்புதேவன் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் கசட தபற.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர் சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், பிரேம்ஜி அமரன், சாந்தனு பாக்கியராஜ், ப்ரியா பவானி சங்கர், ரெஜினா கெஸன்ட்ரா, விஜயலட்சுமி, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் கசட தபற திரைப்படத்தை இயக்குனர் சிம்புதேவன் எழுதி இயக்குகிறார். பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஆன்தாலஜி படமாக தயாராகும் கசட தபற திரைப்படத்திற்கு விஜய்மில்டன் ,எம்.எஸ்.பிரபு ,பாலசுப்ரமணியம் , எஸ்.ஆர்.கதிர், ஆர்.டி.ராஜசேகர் மற்றும் சக்தி சரவணன் என முன்னணி ஒளிப்பதிவாளர்கள் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர்களாக யுவன்-ஷங்கர்-ராஜா, ஷான் ரோல்டன், சந்தோஷ் நாராயணன்,சாம் சி எஸ்,ஜிப்ரான் மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது கசட தபற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது. கசட தபற திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி சோனி லைவ் தளத்தில் நேரடியாக வெளியாகிறது. கசட தபற படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் வகையில் வெளியான புதிய ப்ரோமோ வீடியோ உடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ப்ரோமோ வீடியோ கீழே உள்ள லிங்கில் காணலாம்.