சிவகார்திகேயனுக்காக ரசிகர் செய்த செயல் ! வைரல் வீடியோ
By Aravind Selvam | Galatta | August 27, 2020 12:40 PM IST

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் அயலான் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தடைபட்டுள்ளது.
இதனை அடுத்து தனது நெருங்கிய நண்பரும் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இயக்கத்தில் தயாராகி வரும் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.தெலுங்கில் கடந்த வருடம் நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன்.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.
டாக்டர் படத்தில் இருந்து சில புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.இந்த புகைபடங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தன.இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லம்மா என்ற பாடல் கடந்த ஜூலை 16ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.சமூகவலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது
ரௌடி பேபி,புட்ட பொம்மா உள்ளிட்ட பாடல்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடன இயக்குனர் ஜானி.இவர் இந்த பாடலுக்கு நடனமைக்கவுள்ளதாக நேற்று தெரிவித்தார்.ரிலீசானது முதல் இந்த பாடல் செம வைரலாகி வருகிறது.இந்த பாடலில் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் போட்ட ஸ்டெப்பை பலரும் ட்ரை செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த பாடல் சமீபத்தில் அதிகம் லைக் செய்யப்பட்ட சிவகார்த்திகேயன் பாடலாக ஒரு சாதனையை நிகழ்த்தியது அதோடு 25 மில்லியன் பார்வையார்களையும் கடந்து சாதனை புடைத்திருந்தது.இந்த படத்தின் இரண்டாவது பாடலான நெஞ்சமே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இன்று சிவகார்த்திகேயன்-ஆர்த்தியின் 10ஆவது திருமண நாள்.இதற்காக ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.ரசிகர் ஒருவர் தற்போதைய ட்ரெண்டிங் பாடலான செல்லம்மா பாடலில் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவரையும் வைத்து எடிட் செய்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்லாவே வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.கலாட்டா சார்பாக சிவகார்த்திகேயன்-ஆர்த்தி இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
#SK10thWeddingAnniversary
— Vinnavan Sk (@vinnavansk) August 27, 2020
Happy Wedding Anniversary Anna and Anni.. 🤗❤
🆕Wrk✂️@Siva_Kartikeyan 🙈#AarthiAnni 🤩
Hope U All Watch This🤩https://t.co/n7BOfrrqXh@AnandSkfc @navneth @vimalraj9524 pic.twitter.com/C8e5Z8n4Rg
Dulquer Salmaan announces the release date of his next film!
27/08/2020 12:00 PM
Virat Kohli to become a father - announces baby arrival date
27/08/2020 11:25 AM
Latest Update on Peter Paul's Health - New Video | Vanitha Vijayakumar
27/08/2020 11:00 AM
WATCH: Arjun's Emotional Statement About SP Balasubrahmanyam
26/08/2020 10:07 PM