சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கும்.அதில் நடிக்கும் புதுமுகங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களாக வெகு விரைவில் வளர்ந்து விடுவார்கள்.கொரோனா முதல் அலையை அடுத்து தொடங்கப்பட்ட புதிய தொடர் பூவே உனக்காக.தொடங்கப்பட்டது முதல் ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்று வருகிறது.

அஷீம்,ராதிகா ப்ரீத்தி,ஸ்ரீனிஷ் அரவிந்த்,தேவிப்பிரியா,ஸ்ரீதேவி அசோக் உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.சில மாதங்களுக்கு முன் இந்த தொடரில் நடித்து வந்த அருண்,ஜோவிதா உள்ளிட்டோர் விலக அவர்களுக்கு பதில் அஷீம் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

சில முக்கிய நடிகர்கள் விலகினாலும் கதையின் விறுவிறுப்பு குறையாமல் சீரியல் குழுவினர் பார்த்துக்கொண்டு வருகின்றனர்.இந்த தொடர் 250 எபிசோடுகளை கடந்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் தற்போது பிரபல நடிகையான சாயா சிங் இணைகிறார்.இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக தெரிவித்துள்ளார்.சில வருடங்களுக்கு பிறகு சீரியலில் ரீ-என்ட்ரி தரும் சாயா சிங்கிற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.