தமிழ் திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். நீலாம்பரி கேரக்டர் துவங்கி ராஜா மாதா சிவகாமி பாத்திரம் வரை அசத்திக்கொண்டு இருக்கிறார். கடைசியாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் இவர் ஏற்று நடித்த துணிச்சலான பாத்திரம் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. 

ramyakrishnan

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஆக்டிவாக இயங்கி வருகின்றனர்.

Charmeekaur

இந்நிலையில் நடிகை சார்மி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஷ்யா கிருஷ்ணனுடன் பேசிய வீடியோ கால் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அவரது வீடியோ காலிற்கு அடிமையாகிவிட்டதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.