பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான சித்து +2 படத்தில் அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன்.தொடர்ந்து வில் அம்பு,என்னோடு விளையாடு,பில்லா பாண்டி,கவண்,பலூன்,வஞ்சகர் உலகம் உள்ளிட்ட படங்களின் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்தார்.

Chandini In Balaji Sakthivel and Radha Mohan Movie

ராஜா ரங்குஸ்கி படத்தில் இவரது நடிப்பு விமர்சகர்களிடம் பாராட்டையும்,ரசிகர்களிடம் நற்பெயரையும் பெற்று தந்தது.தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தாழம்பூ என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.தற்போது இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Chandini In Balaji Sakthivel and Radha Mohan Movie

காதல்,கல்லூரி உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் இயக்கும் படத்தில் இவர் நடித்து வருகிறார் என்றும் இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளதென்றும் தகவல் கிடைத்துள்ளது.மேலும் ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் படத்திலும் இவர் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.இத்தனை ஆண்டுகளை கடந்து தனது திறமையால் முத்திரை பதித்துக்கொண்டிருக்கும் சாந்தினிக்கு கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Chandini In Balaji Sakthivel and Radha Mohan Movie