சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடர்களில் ஒன்று பிரியமானவள்.பெரிய ஹிட் அடித்த இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியவர் சாந்தினி பிரகாஷ்.இந்த தொடரில் நடித்த இவர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தார்.

இதனை தொடர்ந்து ராஜா ராணி,சரவணன் மீனாட்சி,சுமங்கலி,பூவே பூச்சூடவா,காற்றின் மொழி என பல சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார் சாந்தினி பிரகாஷ்.நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் பங்கேற்று அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றை தவிர தில்லுக்கு துட்டு,ஓடி ஓடி உழைக்கணும்,ஏமாளி உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் நடித்து அசத்தியுள்ளார் சாந்தினி பிரகாஷ்.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

தற்போது இவர் நடிக்கும் புதிய சீரியல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.கலர்ஸ் தமிழில் மதன்,ரேஷ்மா முன்னணி வேடங்களில் நடித்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் தொடரில் சாந்தினி பிரகாஷ் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.