சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடர்களில் ஒன்று பிரியமானவள்.பெரிய ஹிட் அடித்த இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியவர் சாந்தினி பிரகாஷ்.இந்த தொடரில் நடித்த இவர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தார்.

இதனை தொடர்ந்து ராஜா ராணி,சரவணன் மீனாட்சி,சுமங்கலி,பூவே பூச்சூடவா,காற்றின் மொழி என பல சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார் சாந்தினி பிரகாஷ்.நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் பங்கேற்று அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றை தவிர தில்லுக்கு துட்டு,ஓடி ஓடி உழைக்கணும்,ஏமாளி உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் நடித்து அசத்தியுள்ளார் சாந்தினி பிரகாஷ்.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.அபி டெய்லர்,ஈரமான ரோஜாவே 2 உள்ளிட்ட தொடர்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் சாந்தினி.

தற்போது இவர் நடிக்கும் புது சீரியல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.சன் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்து வரும் தொடர் வனத்தைப்போல,இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த ப்ரீத்திகுமார் சில காரணங்களால் வெளியேற இவருக்கு பதிலாக பொன்னி என்ற கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.இவரது எபிசோடுகள் விரைவில் ஒளிபரப்பை தொடங்கவுள்ளன.