விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி.இந்த தொடரில் ஹீரோவாக சஞ்சீவ் நடித்த சஞ்சீவ் பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபாலமானவராக மாறினார்,இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.இந்த தொடரில் ஹீரோயினாக நடித்தவர் ஆல்யா மானசா.

இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.இருவருக்கும் அழகிய பெண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு ஐலா சையத் என்று இருவரும் பெயரிட்டுள்ளனர்.குழந்தையின் கியூட் வீடீயோவை அவ்வப்போது இருவரும் பகிர்ந்து மகிழ்ந்து வந்தனர்.

அடுத்ததாக சஞ்சீவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காற்றின் மொழி தொடரில் நடித்து வந்தார்.பிரியங்கா எம் ஜெயின் இந்த தொடரின் ஹீரோயினாக நடித்து வந்தார்.மனோகரா கிருஷ்ணன் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.இந்த தொடர் சில மாதங்களுக்கு முன் நிறைவுக்கு வந்தது.இதனை தவிர சில படங்களிலும் நடித்து அசத்தியிருந்தார் சஞ்சீவ்.

சஞ்சீவ் அடுத்ததாக சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள கயல் தொடரில் நடிக்கவுள்ளார்,இந்த தொடரின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கியது.தற்போது இந்த தொடரின் நாயகியாக சைத்ரா ரெட்டி நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.