கன்னடத்தில் ஒளிபரப்பான Avanu Matte Shravani என்ற சூப்பர்ஹிட் சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் சைத்ரா ரெட்டி.இவருக்கு இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.இதனை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் இறுதியில் இணைந்து தமிழில் தனது என்ட்ரியை கொடுத்தார் சைத்ரா ரெட்டி.

இதனை அடுத்து ஜீ தமிழின் பெரிய ஹிட் தொடரான யாரடி நீ மோஹினி தொடரில் நடித்து அசத்தினார்.இந்த தொடரின் முக்கிய வில்லியான ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் சைத்ரா ரெட்டி.1000 எபிசோடுகளை கடந்த வெற்றிகரமான இந்த தொடர் சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள கயல் என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.இந்த தொடரில் ராஜா ராணி தொடரில் நடித்த சஞ்சீவ் ஹீரோவாக நடித்துள்ளார்.இவற்றை தவிர சில படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் சைத்ரா ரெட்டி.

இவர் யாரடி நீ மோஹினி தொடரின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்த ரிஸ்க்கான காட்சி ஒன்றை அவருடன் இணைந்து நடித்த யமுனா சின்னதுரை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.அந்தரத்தில் தொங்கி ரிஸ்க் எடுத்து நடித்த இவரது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்