சினிமா கண்டெடுத்த சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் SA சந்திரசேகர். கொடி, டிராஃபிக் ராமசாமி போன்ற படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் ஜெய், அதுல்யா, வைபவி நடிப்பில் கேப்மாரி எனும் படத்தை இயக்கினார். நடிகர் ஜெய்யின் 25-வது படமாக அமைந்த இந்த படம் சரியாக ஓடாமல் போனது. விமர்சன ரீதியாகவும் பல அடிகளை கண்டது. 

jai

இக்கால இளைஞர்களின் காதல் வாழ்க்கையை மைய்யமாக கொண்ட இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருந்தார். அடல்ட் காமெடி பாணியில் வெளியான இந்த படம் ரசிகர்களை ஈர்க்க தவறியது. தற்போது படத்திலிருந்து இப்படி ஓர் இன்பம் பாடல் வீடியோ வெளியானது. நேஹா நாயர் பாடிய இந்த பாடல் வரிகளை மோகன் ராஜன் எழுதியுள்ளார். 

capmaari jai

நடிகர் ஜெய் கைவசம் கருப்பர் நகரம், பிரேக்கிங் நியூஸ் போன்ற படங்கள் உள்ளது. இயக்குனர் SA சந்திரசேகர் மாநாடு திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார்.