Ala Vaikunthapurramuloo பாடல்கள் படைத்த அசத்தல் சாதனை !
By Aravind Selvam | Galatta | December 17, 2020 21:50 PM IST

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன்.இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் இவர் ஹீரோவாக Ala Vaikunthapuramulo என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கலையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பூஜா ஹெக்டே,நிவேதா பெத்துராஜ் இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர்.பட்டி தொட்டி எங்கும் இந்த படம் வசூல் மழை ஈட்டியது.
தபு,ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.Haarika Hassine Creations மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தனர்.இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் மொழிகளை தாண்டி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான புட்டபொம்மா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இந்த பாடலுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டிக்டாக் செய்யும் அளவிற்கு இந்த பாடல் பிரபலமாக இருந்தது.யூடியூப்பில் இந்த படத்தின் பாடல்கள் பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன.
இந்த படம் டிவியில் ஒளிபரப்பட்டு TRP-யிலும் அசத்தல் சாதனையை நிகழ்த்தியது.இந்த படம் தமிழில் வைகுண்டபுரம் என்ற பெயரில் டப் செய்யப்படும் டிசம்பர் 13ஆம் தேதி ஒளிபரப்பாகி தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது.பலரது இதயங்களை கவர்ந்த இந்த படம் , தற்போது மேலுமொரு மாஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடல்களான Butta Bomma மற்றும் Ramuloo Ramulaa பாடல்கள் யூடியூப் டாப் 10 2020-ல் இடம்பெற்றுள்ள தென்னிந்திய பாடல்கள் என்ற அசத்தல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.இந்த சாதனையை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
Two out of 10! 😱 On such a huge and diverse platform that too! 🥺❤️ This is MASSIVE! Thank you to all the fans...you all have made this happen. You make EVERYTHING worth it. ❤️🙏🏻 Ever so thankful ❤️ #Buttabomma #Ramulooramulaa #YouTube https://t.co/AP8MdgI0Fc
— Pooja Hegde (@hegdepooja) December 14, 2020
Thalapathy Vijay's Master Telugu Teaser | Treat for fans | Vijay Sethupathi
17/12/2020 06:18 PM
Suriya all praise for this Tamil film - calls it a MUST WATCH!
17/12/2020 05:37 PM
Bigg Boss 4 Telugu: Five Finalists and the grand celebration | Exciting Video
17/12/2020 04:48 PM