இந்திய திரையுலகின் முன்னணி நடன இயக்குனராக திகழும் நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் முதன்முறை இயக்குனராக களமிறங்கிய திரைப்படம் ஹே சினாமிகா. துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதாரி மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடித்த ஹே சினாமிகா திரைப்பபம் கடந்த மார்ச் மாதம் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.  

தொடர்ந்து இயக்குனர் மணிரத்னத்தின் ஆஸ்தான நடன இயக்குனராக பல படங்களுக்கு பணியாற்றியுள்ள பிருந்தா மாஸ்டர் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்களுக்கு நடன இயக்கம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற செப்டம்பர் பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலீசாகவுள்ளது.

இதனிடையே பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் இரண்டாவது படமாக தயாராகவுள்ள திரைப்படம் குமரி மாவட்டத்தின் THUGS. பாபி சிம்ஹா, R.K.சுரேஷ், முனீஸ்காந்த் மற்றும் ஹிரிது ஹருண் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் குமரி மாவட்டத்தின் THUGS திரைப்படத்திற்கு பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவில், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்ய, சாம்.C.S இசையமைக்கிறார்.

ரியா ஷிபு சார்பில் ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளா குமரி மாவட்டத்தின் THUGS திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் வரும் நவம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் குமரி மாவட்டத்தின் THUGS திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. குமரி மாவட்டத்தின் THUGS பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

My second film 🌟 need all your blessings and support🙏🙏❤️❤️❤️
First look of #Thugs - A raw and violent saga of bloodshed and brutality#KumariMavattathinThugs

Character introduction teaser at 6:30pm@BrindhaGopal1 @hridhuharoon @actorsimha @studio9_suresh #Munishkanth pic.twitter.com/n0rlfE89cF

— Brindha Gopal (@BrindhaGopal1) September 7, 2022