சின்னத்திரையில் துவங்கி இன்று தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகராக அசத்தி வருபவர் நடிகர் போஸ் வெங்கட். பல கேரக்டரில் இவர் நடித்தாலும், இவரை போஸ் மாமா என்றே நினைவில் வைத்துள்ளனர். சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த சிவாஜி படம் மைல்-கல்லாக அமைந்தது. இதை தொடர்ந்து கோ, சிங்கம், தீரன், கவன் போன்ற படங்களில் முக்கியமான பாத்திரத்தில் நடித்தார். 

bosevenkat

நடிகராக இருந்த போஸ் வெங்கட் இயக்குனர் அவதாரம் எடுத்த திரைப்படம் தான் கன்னிமாடம். ரூபி ஃபிலிம்ஸ் சார்பில் முஹம்மது ஹஷீர் தயாரித்த இந்த படத்திற்கு ஹரி சாய் இசையமைத்திருந்தார். இனியன் ஒளிப்பதிவு செய்திருந்தார். சமீபத்தில் வெளியான இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தது. ஆழமான உணர்வகளை மையப்படுத்தி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் போஸ் வெங்கட். 

kannimaadam kannimadam

 

இயக்குனராய் இருந்து நடிகர்களாக உருவெடுப்போர் மத்தியில் இயக்குனராக தன்னை செதுக்கியிருக்கிறார் போஸ் வெங்கட். நடிகராய் இருந்து தனது கடமையை செய்தவர், இயக்கம் சார்ந்த செயலில் உள்ள அனுபவத்தை கற்றிருப்பார். விரைவில் உச்ச நட்சத்திரங்கள் வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.