தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நடிகர் போண்டாமணி வைகைப்புயல் வடிவேலு மற்றும் சின்ன கலைவாணர் விவேக் ஆகியோருடன் உடன் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர். இலங்கையை பூர்வீகமாக கொண்ட போண்டாமணி இயக்குனர் கே.பாக்கியராஜ் அவர்களின் பவுனு பவுனுதான் படத்தின் மூலம் கடந்த 1991ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர்.

தொடர்ந்து 250 படங்களுக்கு மேல் நகைச்சுவையான கதாபாத்திரங்களில் நடித்த போண்டாமணி, குறிப்பாக வடிவேலு உடன் இணைந்து உனக்கு "வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா", "எங்க போனேன்னு கேப்பாங்க எதுவும் சொல்லிடாதீங்க அடிச்சுக்கூட கேப்பாய்ங்க அப்பவும் சொல்லிடாதீங்க" உள்ளிட்ட பல காமெடிகளில் கலக்கியவர்.

இதனிடையே கடந்த சில நாட்களாக சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த போண்டாமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கும் போண்டா மணிக்கு உதவி செய்ய தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை துணை நடிகர்கள் பலரும் முன்வந்து அவர்களால் முடிந்த உதவிகளை செய்ததோடு மற்றவர்களிடமும் உதவி கேட்டு வருகின்றனர்.

அந்த வகையில் முன்னதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியம் அவர்கள் போண்டா மணியை நேரில் சந்தித்து அவரது சிகிச்சைக்கான பொறுப்பை தமிழக அரசு ஏற்கும் என உறுதியளித்தார். மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் தொலைபேசி வாயிலாக போண்டாமணி தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததோடு ஒரு லட்ச ரூபாய் மருத்துவ உதவிக்காக கொடுத்துள்ளார்.நடிகர் சங்கம் சார்பில் இயக்குனரும் நடிகருமான மனோபாலா போண்டாமணியை நேரில் சந்தித்து நீதி உதவி வழங்கினார். இந்நிலையில் தனது நிலையை உணர்ந்து உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து போண்டாமணி பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோ இதோ…
 

உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த நடிகர் போண்டா மணி..#BondaMani @VijaySethuOffl @Subramanian_ma #Vadivelu @manobalam #VijaySethupathi #MaSubramanian #Galatta pic.twitter.com/lVbv3OmYQt

— Galatta Media (@galattadotcom) September 23, 2022