அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் ! போலீஸ் விசாரணை
By Aravind Selvam | Galatta | May 31, 2021 20:54 PM IST

தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் தல அஜித். நடிப்பு மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர். ஆளில்லா ட்ரோன் விமானங்களை இயக்குவதிலும் அஜித்திற்கு ஆர்வம் அதிகம். அதனால் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தலைமை ஹெலிகாப்டர் ஆலோசகராகவும் பதவி வகித்தார்.
கடைசியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கியிருந்தார்.அடுத்ததாக வலிமை படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் தல அஜித்.இந்த படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார்,போனி கபூர் தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.ஹுமா குரேஷி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.தற்போது அஜித்தின் வீட்டிற்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்,இது குறித்த பிற தகவல்கள் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பல தருணங்களில் இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் பல பிரபலங்களின் வீடுகளுக்கு வரும் அதில் பெரும்பாலான சமயங்களில் வதந்தி ஆக தான் முடிந்திருக்கும் யாரேனும் ஒருவர் விளையாட்டாக இப்படிப்பட்ட காரியத்தை செய்வது தொடர்ந்து கொண்டே வருகிறது.இதுகுறித்து போலீசார் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது.