பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சயிப் அலிகானின் மகளான நடிகை சாரா அலி கான் பாலிவுட் திரையுலகில் கேதார்நாத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து பாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்து வெளிவந்த சிம்பா திரைப்படத்திலும், இயக்குனர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யான் கதாநாயகனாக நடித்த லவ் ஆஜ் கல் திரைப்படத்திலும் நடிகை சாரா அலி கான் கதாநாயகியாக நடித்திருந்தார்.

கடைசியாக நடிகர் வருண் தவான் கதாநாயகனாக நடித்த கூலி நம்பர் 1 படத்தில் நடித்த சாரா அலி கான் அடுத்ததாக நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார். பாலிவுட் இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் அக்ஷய்குமார் இணைந்து நடித்துள்ள அற்றங்கி ரே படத்தில் நடிகை சாரா அலி கான் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சாரா அலி கான் பகிர்ந்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கடற்கரையில் நீச்சல் உடையில்  இருக்கும் புகைப்படத்தை சாரா அலி கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்களை கிறங்கடிக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.