பிரபல மாடல் ஆக தனது மீடியா பயணத்தை தொடங்கி தற்போது இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக அசத்தி வருபவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ்.பெரும்பாலும் ஹிந்தி படங்களில் நடித்து தனக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே பெற்றுள்ளார் ஜாக்குலின்.

பாலிவுட்டில் புகழ்பெற்ற முன்னணி நடிகைகளில் ஒருவராக வெகு விரைவில் அவதரித்தார் ஜாக்குலின்.ஹிந்தியில் முன்னணி நடிகர்களுடன் பலருடன் ஜோடி போட்டுவிட்ட இவர் சில ஸ்ரீலங்கா,பிரிடிஷ் படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.

பல சூப்பர்ஹிட் மியூசிக் வீடியோக்களிலும் நடித்து கலக்கியுள்ளார்.அடுத்ததாக தெலுங்கு,கன்னடா உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவிலும் தனது என்ட்ரியை கொடுக்கிறார்.பிரபாஸ் நடித்த சாஹோ படத்தில் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் தோன்றி அசத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து மகிழ்வார்.தற்போது தனது புதிய செம ஹாட்  போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்துள்ளார் ஜாக்குலின்.இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.