ஆன்லைனில் திரைப்படங்களை விமர்சனம் செய்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன்.பெரும்பாலும் இவர் படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனம் மட்டுமே செய்துள்ளார்.இவரிடம் பாசிட்டிவான விமர்சனம் வாங்கிய படங்கள் மிகக்குறைவே.இவரது விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானதாக இருந்து வருகிறது.

BlueSattai Maaran Film Begins Shoot on Sept 14

படங்களை குறை சொல்ல இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? படம் எடுப்பது எவ்வளவு கடினம் தெரியுமா ? என்று பல திரைத்துறையினரும் , ரசிகர்களும் இவரை விமர்சித்தனர்.இந்நிலையில் தான் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக மாறன் கடந்த வருடம் அறிவித்தார்.

BlueSattai Maaran Film Begins Shoot on Sept 14

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று பூஜையுடன் தொடங்கியது.மாநாடு படத்தை தயாரிக்கவிருந்த சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரிக்கிறார்.நரேன்,ராதாரவி,வழக்கு எண் புகழ் முத்துராமன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

BlueSattai Maaran Film Begins Shoot on Sept 14

இவர்களை தவிர படத்தில் நடிக்கும் அனைவரும் புதுமுகங்கள் தான் என்ற தகவல் கிடைத்துள்ளது.கிட்டத்தட்ட அனைத்து படங்களையும் குறை சொல்லும் மாறன் எப்படி தான் படம் எடுக்கப்போகிறார் என்ற ஆவலோடு ரசிகர்கள் இந்த படத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

BlueSattai Maaran Film Begins Shoot on Sept 14