முன்பெல்லாம் தமிழ்சினிமாவின் விமர்சனங்கள் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சியில் மட்டுமே காணமுடிந்தது. ஆனால் இப்போது  YOUTUBE வழியாக பலரும் திரை விமர்சனங்களை செய்வதை நாம் பார்த்து வருகிறோம். கிட்டத்தட்ட ஆறு ஏழு வருடங்களாக  YOUTUBE-ல் பலரும் சினிமா விமர்சனங்கள் செய்து வருகிறார்கள். 

குறிப்பாக தமிழ் சினிமா விமர்சனங்கள் செய்பவர்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை கடந்துள்ளது.இப்படி சினிமா விமர்சனங்கள் செய்பவர்களில் மிகவும் குறிப்பிடப்படும் ஒரு நபர் BLUE சட்டை மாறன்.எல்லா வீடியோகளிலும் நீலநிற சட்டை அணிவது இவரது வழக்கம். தனக்கென்று தனி உடல் மொழியுடன் அவர் செய்யும் விமர்சனங்களை பார்ப்பதற்கென்றே பல ரசிகர்கள் செல்கிறார்கள். 

மிகப் பெரிய ஸ்டார்கள் நடித்த திரைப்படம் ஆனாலும் சரி சாதாரண திரைப்படம் ஆனாலும் சரி அதனை இவர் செய்யும் விமர்சனத்தையும் இந்த விமர்சனத்தில் இருக்கும் நையாண்டியையும் பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது. திரைப்படங்களுக்கு இவர் செய்த விமர்சனத்தால் பல எதிர்ப்புகளை சம்பாதித்து இருந்தாலும் இன்றும் தொடர்ந்து பல திரைப்படங்களுக்கான விமர்சனங்களை செய்து கொண்டுதான் இருக்கிறார். 

சில மாதங்களுக்கு முன்பு இவர் இயக்கிய ஆன்டி இந்தியன் திரைப்படத்தை சென்சார் செய்த சென்சார்க்குழு அத்திரைப்படத்தை  வெளியிட தடை விதித்தது.ஆன்டி இந்தியன் திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசை அமைத்து அதனை இயக்கியிருக்கிறார் BLUE சட்டை மாறன். சமூக பிரச்சினைகளை பற்றி பேசும் விதமாக இருக்கக்கூடிய இத்திரைப்படத்திற்கு சென்சார் தடை விதித்துள்ளது. இந்நிலையில்  .ஆன்டி இந்தியன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது YOUTUBE-ல் வெளியாகி வருகிறது.