நிவின் பாலி நடிப்பில் கடந்த 2016-ல் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த திரைப்படம் Jacobinte Swargarajyam.இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தவர் ரெபா மோனிகா ஜான்.தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்த இவர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தார்.அடுத்ததாக 2018-ல் ஜெய் நடித்த ஜருகண்டி படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்

தொடர்ந்து தமிழ்,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார் ரெபா.அடுத்ததாக விஜய் நடிப்பில் கடந்த 2019-ல் வெளியான பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார் ரெபா.பிகில் படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.

இவர் நடித்த குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடல் 100 மில்லியனை கடந்து செம ஹிட் அடித்தது.அடுத்ததாக FIR உள்ளிட்ட சில முக்கிய படங்கள் மற்றும் கவினுடன் ஆகாஷ்வாணி வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றில் நடித்துள்ளார் ரெபா.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் ரெபா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

இவர் Joemon Joseph என்பவரை கடந்த ஜனவரி 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.தற்போது இவரது திருமணம் குறித்த ஒரு சிறு வீடீயோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்,கணவருக்கு ரொமான்டிக் ஆக முத்தம் கொடுப்பது போல உள்ள இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.