விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மீது ரசிகர்களுக்கு எப்போதும் தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில் வெள்ளித்திரையில் பல சாதனைகள் படைத்து சின்னத்திரையில் முதல் முறையாக தொகுப்பாளர் அவதாரம் எடுத்த உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

இதுவரை பிக்பாஸில் ஐந்து சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சில மாதங்களுக்கு முன்பு 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானது. இதில் நட்சத்திர நடிகர் சிலம்பரசன்.TR-ம் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் பரிசுத்தொகையை வெல்லும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல் இதில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தனியாக ரசிகர்கள் பட்டாளங்கள் உருவாகின. அதன் பிறகு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் சீரியல்கள், திரைப்படங்கள் என அவர்களுக்கு பல கதவுகள் திறந்தன. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் அறிவிப்பு வெளியானது.

இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொது மக்களில் இருந்தும் ஒருவர் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் விக்ரம் பட பாணியில் கமல்ஹாசன் "வீடு ஒன்னு இருந்தா" என ஸ்டைலாக கலக்கிய அறிவிப்பு ப்ரோமோ வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 9ஆம் தேதி ஞாயிறு மாலை 6 மணி முதல் ஒளிபரப்பாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

காடுன்னு ஒன்னு இருந்தா.. ராஜான்னு ஒருத்தரு தான இருக்க முடியும்! 👑 #BiggBossTamil6 - அக்டோபர் 9 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு.. @ikamalhaasan @preethiIndia @NipponIndia pic.twitter.com/ULgfT5J0XW

— Vijay Television (@vijaytelevision) September 27, 2022