தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த முக்கிய நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்.இதுவரை நடந்து முடிந்த மூன்று சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு, நல்ல TRPயையும் பெற்றிருந்தது.இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த தொடரில் முதல் மூன்று சீசனில் பங்கேற்ற பிரபலங்கள் பட்டி தொட்டி எங்கும் உள்ள மக்களின் ஆதரவை பெற்று நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர்.பிக்பாஸ் தொடரின் நான்காவது சீசன் ஜூலையில் தொடங்கவிருந்தது,கொரோனா தாக்கத்தால் ஷூட்டிங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜூலையில் நடைபெறவிருந்த இந்த தொடரின் ஷூட்டிங் தள்ளிப்போனது.

இந்த தொடரையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.ஒருவழியாக அக்டோபர் 4ஆம் தேதி பிரம்மாண்டமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது.ஜித்தன் ரமேஷ்,ரேகா,ஷிவானி நாராயணன்,ரியோ ராஜ்,சுரேஷ்,அனிதா சம்பத்,ஆரி,கேப்ரியல்லா,பாலாஜி,அறந்தாங்கி நிஷா,ஆஜித் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.

100 நாட்கள் நடைபெறும் இந்த தொடரின் புதிய ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி குழுவினர் வெளியிட்டுள்ளனர்.ரேகா சனம் ஷெட்டி மற்றும் ரம்யா பாண்டியனுடன் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகிறார் அவரை மற்றவர்கள் சமாதானப்படுத்துகிறார்கள்.இந்த ப்ரோமோ வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்